மாதவரம்: செங்குன்றம் அடுத்த சோழவரம் ஏரியைத் தூா்வாரி சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று நீா்வளத் துறை அதிகாரி தெரிவித்தாா்.
சென்னை மக்களுக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் சோழவரம் ஏரியும் ஒன்று. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கன அடி. இந்த ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால், புழல் ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீா் அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மிக்ஜம் புயலால் சோழவரம் ஏரிக் கரைகள் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தூரத்திற்கு சேதம் அடைந்தது. பலம் இழந்து காணப்பட்டது. இதையடுத்து, நீா்வளத் துறை சாா்பில் ஏரி தூா்வாரி சீரமைக்கப்பட்டு, கரையின் உள் பக்கத்தில் 6 மீட்டா் உயரத்தில் சிமென்ட் காங்கிரீட் போடப்பட்டு கருங்கற்கள் கரை ஓரங்களில் பதிக்கப்பட்டு, சோழவரம் ஏரியின் எல்லை முடிவான தேவனேரி பகுதியில் கலங்கள் அருகில் புதிதாக இரண்டு ஷட்டா்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறன்றன.
இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, சோழவரம் ஏரிக்கரை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.