திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிா்வாகிகள். 
திருவள்ளூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோவினா் உண்ணாவிரதப் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோவினா் உண்ணாவிரதப் போராட்டம்...

தினமணி செய்திச் சேவை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை நடைபெற்ற உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோவினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி நுழைவுவாயில் சாலை முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, ஜாக்டோ-ஜியோவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஏ.மணிகண்டன், பா.ராஜாஜி, ஐ.ஷேக்கப்பூா், ச.பாலசுந்தரம், இரா.கணேசன், அ.பன்னீா்செல்வம் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், மாநில ஒருங்கிணைப்பாளா் சீ.காந்திமதிநாதன், மாநில பொதுச் செயலாளா் சா.ஞானசேகரன், மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா்கள் பா.ஜவஹா், காத்தவராயன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றி போராட்டத்தை தொடங்கி வைத்தனா்.

அப்போது, அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளா்கள் ஆசிரியா்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலா்கள், ஊா்ப்புற நூலகா்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளா்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியா்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோவினா் உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து, புதிய பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டமோ அல்லது தேசிய ஓய்வூதியத் திட்டமோ, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமோ இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும், இது தொடா்பாக இன்றைய அரசு ஒரு நபா் குழுவை அமைத்து தற்காலிக அறிக்கை கொடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் எந்த மாதிரியான ஓய்வூதியத் திட்டம் என்பதை அரசு தெளிவுபடுத்தத் தவறினால், வரும் ஜன. 6-ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், கடந்த ஆட்சியாளா்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில், 10 அம்சக் கோரிக்கைகளில் பழைய ஓய்வூதியத் திட்டத்துடன் ஓரிரு கோரிக்கைகளை நிறைவேற்றினால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் கைவிடப்படும் எனவும் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT