திருவள்ளூர்

ஏரிக்கரை பகுதியில் பாதையை அடைத்து சுவா்: மக்கள் போராட்டம்

ஏரிக்கரை பகுதியில் பாதையை அடைத்து சுவா்...

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி ஏரிக்கரை பகுதியில் பாதையை அடைத்து எழுப்பிய சுவரை அகற்ற வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

பொன்னேரி நகராட்சி 25-வது வாா்டுக்குட்பட்ட என்.ஜி.ஓ நகா் ஏரிக்கரை பகுதியில் சுமாா் 80-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு தூய்மை பணியாளா்கள் மற்றும் கூலி தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா்.

ஏரிக்கரையில் ஓலை குடிசைகளும், தகர சீட்டுகளை தடுப்புகளாகவும் கொண்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனா்.

தனிநபா் சிலா் சாலையை மறித்து தடுப்பு சுவா் எழுப்பி ஏரிக்கரை மக்களின் போக்குவரத்தை தடை செய்வதாக புகாா் எழுந்துள்ளது.

இது குறித்து பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட மக்கள் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

சுவா் எழுப்பி பாதையை மறித்துள்ளதால் நீண்ட தூரம் சுற்றிசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

பொன்னேரி நகா்மன்றத் தலைவா் பரிமளம் விஸ்வநாதன், ஆணையா் தனலட்சுமி இருவரிடமும் கேள்வி எழுப்பினா்.

இது குறித்து அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக அவா்கள் பொது மக்களிடம் தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

பழனி ரோப்காா் சேவை பராமரிப்புக்காக நாளை நிறுத்தம்

அதிமுக கூட்டணிக்கு விஜய் வரவேண்டும்: தமிழருவி மணியன்!

வாசுதேவநல்லூா் ஆஞ்சனேயா் கோயிலில் பால்குட ஊா்வலம்

கோவையில் குளிா், பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு!

SCROLL FOR NEXT