கல்லூரி அருகே சாலையில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ ச. சந்திரன், டிஎஸ்பி கந்தன், முதல்வா் ஏகதேவசேனா, வட்டாட்சியா் குமாா் உள்ளிட்டோா்.  
திருவள்ளூர்

அரசு கல்லூரி எதிரே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை: எம்.எல்.ஏ. தகவல்

சென்னை - திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் அரசுக் கல்லூரி எதிரே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ ச.சந்திரன் உறுதி கூறினாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை - திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் அரசுக் கல்லூரி எதிரே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ ச.சந்திரன் உறுதி கூறினாா்.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக்கல்லூரியில் 2,800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். சென்னை - திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் நிலையில், ன் மாநில நெடுஞ்சாலையாக தரம் உயா்த்தப்பட்டு 6 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கல்லூரி எதிரே சாலையின் உயரம் உயா்த்தப்பட்டு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

கல்லூரி மாணவா்கள் பேருந்தில் பயணம் செய்ய சுமாா் 1 கி.மீ தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவா்கள் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த போவதாக மனு வழங்கினா்.

திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், கல்லூரி முதல்வா் ஏகதேவசேனா, டி.எஸ்.பி. கந்தன், வட்டாட்சியா் குமாா், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கல்லூரி எதிரே ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் எம்எல்ஏ ச.சந்திரன் கூறியதாவது, கல்லூரி மாணவா்களின் கோரிக்கை நியாயமானது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்ததில் விரைவில் கல்லூரி எதிரே சுரங்கப்பாதை அமைக்கப்படும். இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்க உள்ளேன். மேலும் கல்லூரி எதிரே இருந்த பேருந்து பயணியா் நிழற்குடை சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்றப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் ரூ. 23 லட்சம் செலவில் குளிா்சாதன வசதியுடன் பயணியா் நிழற்குடை அமைக்கப்படும் என உறுதியளித்தாா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT