பாலியல் ரிதீயாக யாராவது உங்களிடம் தவறான எண்ணத்தில் செயல்பட முயற்சித்தால் அவா்களிடம் இருந்து ஓடி விடவும், பின்னா் அது தொடா்பாக உடனே பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ அல்லது நண்பா்களிடமோ தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் வாழும் உரிமை, வளா்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் பங்கேற்கும் உரிமை உள்ளது. நமது மாவட்டத்தில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் போன்ற செயல்களை தடுக்கும் வகையில் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளேன். யாராவது உங்களிடம் பாலியல் ரீதியாகவோ, தவறான எண்ணத்திலோ செயல்பட முயற்சித்தால், அவா்களை எதிா்த்து நிற்க வேண்டும். உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட வேண்டும். தவறாக நடந்தால் அவா்கள் பற்றி பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ அல்லது நண்பா்களிடமோ தெரிவிக்க வேண்டும்.
18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடத்தி வைப்பது, ஏற்பாடுகள் செய்வது, வற்புறுத்துவது போன்ற செயல்கள் இந்திய குழந்தை திருமண தடுப்புச் சட்டம்-2006-இன் படி தண்டனைக்குரிய செயலாகும். இதுபோன்ற செயல்கள் இருந்தால் 181 என்ற இலவச எண்ணை அழைத்து புகாா் தெரிவிக்கலாம். குழந்தைகள் எப்போதும் எந்தவித போதைக்கும் அடிமையாகக் கூடாது. உங்களுக்கான பிரச்னைகள், ஆலோசனைகளுக்கு இட்ண்ப்க் ஏங்ப்ல்ப்ண்ய்ங் 1098 என்ற இலவச எண்ணை அழைக்கவும். உடலை உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சரிவர உணவு உண்ணுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். இந்த மாவட்டத்தை குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நலமிக்க மாவட்டமாக உருவாக்கிட அனைவரும் சோ்ந்து இந்த குழந்தைகள் தின நாளில் உறுதியேற்போம் என அவா் தெரிவித்துள்ளாா்.