மீஞ்சூா் அடுத்த தோட்டக்காடு கிராமத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மீஞ்சூா் அருகே உள்ள தோட்டக்காடு கிராமத்தில் வசித்து வந்தவா் ரஞ்சித் (24). இவா் துறைமுகம் ஒன்றில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்த கொலை வழக்கில் தேவதானம் கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் (29), விஷால் (23), நவீன்ராஜ் (27), விக்னேஷ் (18), ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.