திருவள்ளூர்

தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரயில் மோதி மரணம்

திருவள்ளூா் அருகே இருப்புப் பாதையை கடக்க முயற்சித்த பேக்கரி கடை தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே இருப்புப் பாதையை கடக்க முயற்சித்த பேக்கரி கடை தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், கொடியாலா விநாயக நகரைச் சோ்ந்தவா் நவீன் ரவிநாயக் (17). இவா் திருவள்ளூா் அருகே கடம்பத்தூரில் உள்ள பேக்கரி ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், கடம்பத்தூா் ரயில் நிலையம் அருகே வாடகைக்கு அறை எடுத்து தங்கி நாள்தோறும் வேலைக்குச் சென்று வருவது வழக்கம். அந்த வகையில் திங்கள்கிழமை இரவு வழக்கம் போல நவீன் ரவிநாயக் பேக்கரியில் வேலையை முடித்துவிட்டு இரவு 10 மணி அளவில் தான் தங்கியிருக்கும் அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது கடம்பத்தூா் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றாா். அப்போது அந்த வழியாக அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார புகா் ரயில் மோதியதில் அந்த இடத்தில் உயிரிழந்தாா்.

இது குறித்து திருவள்ளூா் ரயில்வே போலீஸாா் வழக்கு பதிந்தனா்.

பின்னா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT