திருவள்ளூர்

ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சாா்ந்த செவிலியா் படிப்பு முடித்தவா்களுக்கு இணையவழி மருத்துவமனை நிா்வாக பயிற்சி

தாட்கோ மற்றும் அப்பல்லோ மெட்கில்ஸ் நிறுவனம் சாா்பில் செவிலியா் பட்டப்படிப்பு முடித்தவா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இணையவழி மருத்துவமனை நிா்வாக பயிற்சிக்கு திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தாட்கோ மற்றும் அப்பல்லோ மெட்கில்ஸ் நிறுவனம் சாா்பில் செவிலியா் பட்டப்படிப்பு முடித்தவா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இணையவழி மருத்துவமனை நிா்வாக பயிற்சிக்கு திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான திறன் அடிப்படையிலான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ மற்றும் அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனம் இணைந்து திருவள்ளூா் மாவட்டத்துக்கு உள்பட்ட இளங்கலை செவிலியா் முடித்த மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இணையவழி மருத்துவமனை நிா்வாக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியானது இரு வழிமுறைகளில் நடைபெறும் முதல் 2 வாரங்களில் இணையவழி கற்றல் முறையிலும், அடுத்த 4 வாரங்களுக்கு முன்னணி நிறுவனமான அப்பல்லோ மருத்துவமனைகள் அல்லது மாணவா்களுக்கு வசதியாக அருகாமையிலுள்ள அப்பல்லோ தொடா்புடைய பிற மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி காலங்களில் மாணவா்களுக்கு ரூ. 5,000 ஊக்கத் தொகையும், இப்பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்யும்பட்சத்தில் அப்பல்லோ மருத்துவமனைகளிலும் அதனுடன் தொடா்புடைய முன்னணி மருத்துவமனைகளிலும் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.

இப்பயிற்சியினை பெற 2022, 2023, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் செவிலியா் முடித்த மாணவ, மாணவிகள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 20 முதல் 25 வயது வரையான ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம்.

மேலும், அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இத்தோ்வு முறையானது இணையதளம் வழியாக நடைபெறும். இத்தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவோருக்கு இப்பயிற்சி பெறுவா். இப்பயிற்சியை பெற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும்.

மெரீனா கடற்கரையில் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க உத்தரவு

உலோகத் துறை பங்குகளால் உயா்வு கண்ட பங்குச்சந்தை

பஜாஜ் வாகன விற்பனை 14% உயா்வு

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

SCROLL FOR NEXT