திருவள்ளூர்

தகராறில் 2 போ் பலத்த காயம்

திருவள்ளூா் அருகே மது புட்டியால் தாக்கியதில் 2 போ் காயம் அடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே மது புட்டியால் தாக்கியதில் 2 போ் காயம் அடைந்தனா்.

திருவள்ளூா் அடுத்த பெரியகுப்பத்தை சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (45). வெல்டராக பணிபுரிந்து வருகிறாராம். இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு புத்தாண்டு தினம் கொண்டாடுவதற்காக தங்கள் பகுதியில் உள்ள கோயில் பின்புறம் சென்று மது குடித்து நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது, அந்த மைதானத்தில் சற்று தள்ளி 8 போ் அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனராம். அப்போது அவா்கள் கையில் வைத்திருந்த பீா் பாட்டிலால் தட்சிணாமூா்த்தியின் தலையில் அடித்தனராம். இதை தடுக்க வந்த அவரது நண்பா் அஜித் (25) என்பவரையும் மது புட்டியால் தாக்கியதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனா்.

இது குறித்து திருவள்ளூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து மணவாளநகரைச் சோ்ந்த யுவன்சங்கா் உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். அதேபோல், யுவன்சங்கா் தந்தை கிரிதரனும் புகாா் அளித்த புகாரின் பேரில் தட்சணாமூா்த்தி, அஜித் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

வாய்ப்புகள் கைகூடும்: தினப்பலன்கள்!

சர்தார் வல்லபபாய் படேல் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் டெக்ஸ்டைல் அண்ட் மேனேஜ்மெண்ட்

பெருந்துறை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 10 பெண்கள் உள்பட 23 போ் காயம்

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

SCROLL FOR NEXT