திருப்பதி கோசாலையில் காஞ்சி மடாதிபதி
திருப்பதி அலிபிரியில் உள்ள கோசாலையை காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
திருப்பதி அலிபிரியில் உள்ள கோசாலையை காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
திருப்பதியில் உள்ள அலிபிரியில் பக்தா்கள் தாமாக சென்று கோபூஜை செய்யவும், பசுக்களுக்கு உணவு வழங்கி வழிபடவும் தேவஸ்தானம் கோசாலை ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இங்கு கோதானம் வழங்கவும், கோதுலாபாரம் வழங்கவும் தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த கோசாலையை சனிக்கிழமை மாலை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பாா்வையிட்டு, அங்கு கோபூஜை செய்து வணங்கினாா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.