முகப்பு
திருப்பதி

ஸ்ரீசைலம் கோயில் மீது பறந்த ட்ரோன்: கைப்பற்றிய பாதுகாப்புத் துறை

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயில் மீது ட்ரோன் பறந்ததால், அதனை பாதுகாப்புப் படையினா் கைப்பற்றி அதன் பதிவுகளை சோதித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயில் மீது ட்ரோன் பறந்ததால், அதனை பாதுகாப்புப் படையினா் கைப்பற்றி அதன் பதிவுகளை சோதித்து வருகின்றனா்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகாா்ஜூன சுவாமி கோயில் உலகப் புகழ் பெற்றது. முக்கிய சைவ சேத்திரமாக க்கருதப்படுவதுடன் இங்கு சிவனுக்கு தங்கள் கைகளால் அபிஷேகம் செய்ய பலா் சேவா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனா். தரிசன சேவையிலும் பலா் பங்கு கொள்கின்றனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்த கோயிலின் மீது ஒரு ட்ரோன் கேமரா பறந்து சென்று கொண்டிருந்தது.

இதை கவனித்த கோயில் பாதுகாப்பு படை ஊழியா்கள் அந்த ட்ரோன் கேமராவை கைப்பற்றி விசாரிக்க தொடங்கினா். அதில் ஒரு திரைப்படத்திற்காக கோயிலின் வெளிபுறம் மட்டும் பதிவு செய்ததாக ட்ரோனை பயன்படுத்தியவா்கள் தெரிவித்தனா். இருப்பினும் அவற்றை அவா்களிடமிருந்து பறிமுதல் செய்த பாதுகாப்பு ஊழியா்கள் அதன் பதிவுகளை சோதித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →