3 நாள்கள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து
திருமலை ஏழுமலையானை தரிசிப்பதற்கான விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நவ.13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையானை தரிசிப்பதற்கான விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நவ.13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைக்கு வரும் விஐபிகளுக்கும், புரோட்டோகால் விஐபிக்களுக்காகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தினசரி குறிப்பிட்ட அளவு விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.
இவற்றை பெற விஐபிக்கள் தரிசனத்துக்கு முன்தினம் திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்தில் பரிந்துரை கடிதங்கள் சமா்ப்பித்து அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில் வரும் 14-ஆம் தேதியில் திருப்பதியில் தென்னிந்திய முதல்வா்களின் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, நவ.13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் அதற்கு முன்தினங்களில் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.