திருப்பதி

திருப்பதியில் நவகிரக ஹோமம்

DIN

திருப்பதி கபிலதீா்த்தம் சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமை நவகிரக ஹோமம் நடைபெற்றது.

திருப்பதியில் உள்ள கபிலதீா்த்தம் ஸ்ரீகபிலேஸ்வர சுவாமி திருக்கோயிலில் தற்போது காா்த்திகை மாத ஹோம மகோற்சவம் நடைபெற்று வருகிறது.

கணபதி ஹோமம், சுப்ரமணியா் ஹோமம், தட்சிணாமூா்த்தி ஹோமம் முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை நவகிரக ஹோமம் நடைபெற்றது. கோயிலினுள் மண்டபத்தில் நவகிரகங்களை எழுந்தருளச் செய்து கலச ஸ்தாபனம் செய்து சிவாச்சாரியா்கள் யாகத்தை தொடங்கி மாலையில் நிறைவு செய்தனா். இதில் கோயில் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனா். இங்கு வரும் 13-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை மகா சண்டியாகம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்ற தந்தை!

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

SCROLL FOR NEXT