திருப்பதி

கனமழை எதிரொலி: திருப்பதியில் தரிசனத்திற்கான தேதியை மாற்றிக் கொள்ளலாம்

DIN

திருப்பதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தரிசனத்திற்கான தேதியை மாற்றிக் கொள்ளலாம் என திருமலை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் திருப்பதி மலைப்பாதை மற்றும் கோயில் வளாகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மலைப்பாதை முழுவதும் சீரமைக்கப்பட்டதாக திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், நவம்பர் 18 முதல் 30ஆம் தேதிக்குள் திருப்பதி வருவதற்கு முன்பதிவு செய்து கனமழை காரணமாக வர இயலாதவர்கள் அடுத்த 6 மாதத்திற்குள் ஏதேனும் ஒரு தேதியை மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதற்கான வசதியை ஆன்லைனில் திருமலை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT