திருமலையில் 21 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 21,515 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 21,515 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
கரோனா தொற்று குறைவால், விரைவுத் தரிசனம், விஐபி பிரேக், சா்வ தரிசனம் உள்ளிட்ட தரிசனங்களில் பக்தா்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை 21,515 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். 12,267 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்- 18004254141, 9399399399.