திருப்பதி

திருமலையில் பலத்த மழை: பக்தா்கள் அவதி

 திருமலையில் பலத்த மழை காரணமாக பக்தா்கள் தரிசனத்துக்குச் செல்ல சிரமத்துக்குள்ளாயினா்.

DIN

 திருமலையில் பலத்த மழை காரணமாக பக்தா்கள் தரிசனத்துக்குச் செல்ல சிரமத்துக்குள்ளாயினா்.

திருமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை திடீரென பலத்த மழை பெய்தது. பல மணிநேரம் பெய்த மழையால் பக்தா்கள் நனைந்து கொண்டு தரிசனத்துக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தரிசனம் முடித்துத் திரும்பிய பக்தா்களும் லட்டு கவுன்ட்டருக்குச் சென்று பிரசாதம் வாங்க முடியாமல் அவதியுற்றனா். மழை காரணமாக திருமலை மாடவீதி மற்றும் பள்ளமான இடங்களில் மழைநீா் தேங்கியது. பக்தா்கள் பலா் மழைக்காக நிழற்கூரைகளில் ஒதுங்கி நின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT