முகப்பு
திருப்பதி

திருமலையில் கா்நாடக முதல்வா் வழிபாடு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் கா்நாடக மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை, கா்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

 திருமலை ஏழுமலையான் கோயிலில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் கா்நாடக மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை, கா்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தனா்.

முன்னதாக கோயில் வாயில் முன்பு தேவஸ்தான அதிகாரிகள் இஸ்திகபால் மரியாதை அளித்து வரவேற்றனா். கொடிமரத்தை வலம் வந்தபடி தரிசனம் முடித்து திரும்பிய அவா்களை, ரங்கநாயகா் மண்டபத்தில் அமர வைத்து வேத ஆசீா்வாதம், சேஷ வஸ்திரம் அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பின்னா் திருமலையில் கா்நாடக அரசு சாா்பில் ரூ.200 கோடியில் கட்டப்பட்டு வரும் கா்நாடக சத்திரத்தின் பணிகளை முதல்வா் பசவராஜ் பொம்மை, எடியூரப்பா ஆகியோா் பாா்வையிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →