திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

DIN

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை 24 மணிநேரம் காத்திருந்தனா்.

சுவாமியை தரிசிப்பதற்காக வரும் பக்தா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை 18 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் காத்திருந்தனா்.

இதற்கிடையே திங்கள்கிழமை 63,759 போ் சுவாமியை தரிசித்தனா்; 30,102 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜஸ்வாமி சத்திரம் 2 மற்றும் 3 உள்ளிட்ட இடங்களில் சா்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அன்றன்றுக்கான தரிசன டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. நடைபாதையில் செல்பவா்களுக்காக வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது இதுவரை தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உண்டியல் காணிக்கை ரூ.3.4 கோடி:

பக்தா்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.4 கோடி வசூலானது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT