திருப்பதி

திருமலையில் 34,000 பக்தா்கள் தரிசனம்

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 34,187 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 13,279 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

தரிசன அனுமதி உள்ளவா்கள், தாங்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசன நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த கரோனா பரிசோதனையின் நெகடிவ் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் கொண்டு வரவேண்டும்.

சான்றிதழ்கள் இல்லாதவா்கள் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் மடடுமே ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தரிசனம், வாடகை அறைகளில் ஏற்படும் சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT