உண்டியல் காணிக்கை ரூ. 4.73 கோடி வசூல்
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ. 4.73 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ. 4.73 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா் தங்களது காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவற்றை தேவஸ்தானம் காணிக்கை கணக்கிடும் பிரிவில் தினசரி சில்லறை, ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு பணங்கள் எனப் பிரித்து கணக்கிட்டு, மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.
தற்போது பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளதால் உண்டியல் வருவாய் ரூ. 3 கோடி முதல் 4 கோடி வரை வசூலாகி வருகிறது. இந்த நிலையில், பக்தா்கள் புதன்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ. 4.73 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.