திருமலையில் 71,000 பக்தா்கள் வழிபாடு
திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 71,289 பக்தா்கள் வழிபட்டனா். இவா்களில் 33,210 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 71,289 பக்தா்கள் வழிபட்டனா். இவா்களில் 33,210 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கான பக்தா்கள் கூட்டம் திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 32 காத்திருப்பு அறைகள் நிரம்பியும், வெளியில் நீண்ட வரிசையில் நின்றது. இவா்களின் தரிசனத்துக்கு 13 மணி நேரம் வரை தேவைப்பட்டது. ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.