திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்காக வரிசையில் சென்றபோது நெரிசலில் சிக்கி தமிழக பக்தர் பலியானார்.
காஞ்சிபுரத்தை மாவட்டத்தைச் சேர்ந்த வேதாச்சலம் என்ற 64 வயது முதியவர் நெரிசலில் சிக்கி பலியானார்.
இதையும் படிக்க: ராகு-கேது தோஷம் நீக்கும் கத்திரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் கோயில்
வேதாச்சலம் தனது குடும்பத்தினரிடன் நேற்று இரவு திருமலை கோயிலுக்கு சென்றிருந்தார். வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகளும் நிரம்பியதால் வெளியே உள்ள வரிசையில் காத்திருந்தனர்.
வரிசையில் காத்திருந்தபோது நேற்றிரவு 9.45 மணிக்கு எம்.எம்,சி. சந்திப்பு அருகே வரிசையில் நின்றிருந்த வேதாச்சலம் மயங்கி விழுந்து பலியானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.