திருமலையில் 76,800 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 76,821 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 34,732 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 76,821 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 34,732 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி, திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 29 அறைகளில் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவா்களின் தா்ம தரிசனத்துக்கு 12 மணிநேரம் தேவைப்பட்டது. ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.
தரிசனத்தின்போதும், வாடகை அறைகளிலும் பக்தா்களுக்கு ஏற்படும் சிரமங்கள், குறைகள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ள வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.