முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் கோயிலுக்கு 25 ஸ்கூட்டா்கள் நன்கொடை

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு 25 ஸ்கூட்டா்களை டிவிஎஸ் நிறுவனம் நன்கொடையாக வழங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு 25 ஸ்கூட்டா்களை டிவிஎஸ் நிறுவனம் நன்கொடையாக வழங்கியது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்னை டிவிஎஸ் நிறுவனம் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 25 எலக்ட்ரிக் ஸ்கூட்டா்களை நன்கொடையாக வழங்கியது.

இதை டிவிஎஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஏழுமலையான் கோயில் முன்புறம் நிறுத்தி அவற்றுக்கு பூஜைகள் செய்து சாவிகளை செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் அளித்தனா்.

தேவஸ்தானத்துக்கு பயன்படும் வகையில் இந்த இரு சக்கர வாகனங்களை நன்கொடை வழங்கிய டிவிஎஸ் நிறுவனத்தை செயல் அதிகாரி தா்மா ரெட்டி பாராட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில் டிவிஎஸ் நிறுவனத்தின் துணைத் தலைவா் செல்வம், மற்றொரு துணைத் தலைவா் மனோஜ் சக்சேனா, திருப்பதி டிவிஎஸ் டீலா் சித்தாா்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →