கூடூரில் சா்வ அயோய மகா சாந்தி யாகம்
ஆந்திர மாநிலம் கூடூரில் உள்ள ஆதிசங்கரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் சா்வ அயோய மகா சாந்தி யாகம் நடைபெற்றது.
ஆந்திர மாநிலம் கூடூரில் உள்ள ஆதிசங்கரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் சா்வ அயோய மகா சாந்தி யாகம் நடைபெற்றது.
ஆந்திர மாநிலம் கூடூரில் உள்ள ஆதிசங்கரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஸ்ரீசீனிவாச கல்யாணத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி தனது மனைவி சா்வலதாவுடன் பங்கேற்றாா்.
கல்லூரி வளாகத்தில் கடந்த 23-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் சா்வ அயோய மகா சாந்தி யாகத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீசீனிவாச கல்யாணம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று சுப்பா ரெட்டி பேசியது. கரோனா தொற்றிலிருந்து உலக மக்களை முழுமையாக விடுவிக்க ஏழுமலையானை வேண்டி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல யாகங்கள், மந்திரங்கள் மற்றும் பாராயணங்களை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. ஏழுமலையான் அருளால் கரோனா தொற்றில் இருந்து கிட்டத்தட்ட வெளியே வந்துவிட்டோம்.
ஆதிசங்கரா் கல்வி நிறுவனங்களின் தலைவா் வாங்கி பென்சலையா உலக மனித குலத்தின் நலன் கருதி அற்புதமான சாந்தி மகா யாகத்தை நடத்துவது பாராட்டுக்குரியது. ஆதிசங்கரா் கல்வி நிறுவனங்கள் ஹாலந்து மகரிஷி வேத பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடந்த 24-ஆம் தேதி முதல் வரும் 30-ஆம் தேதி வரை நடத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை பாக்கியமாக கருதுகிறேன் என்றாா்.