திருமலையில் ஹரியாணா ஆளுநா் வழிபாடு
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஹரியாணா மாநில ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா வழிபாடு செய்தாா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஹரியாணா மாநில ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா வழிபாடு செய்தாா்.
ஏழுமலையானை ஹரியாணா ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை தரிசித்தாா். முன்னதாக கோயில் முன்வாசல் அருகில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனா். தரிசனம் முடித்து திரும்பியதும் ஏழுமலையானின் பிரசாதங்கள், சேஷ வஸ்திரம் ஆகியவற்றை தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி வழங்கினா்.
இதையடுத்து திருச்சானூா் சென்று ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலிலும் ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா வழிபாடு செய்தாா்.