முகப்பு
திருப்பதி

வெளிநாட்டு நாணயங்கள் இ-ஏலம்

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியலில் செலுத்தப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் இ-ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியலில் செலுத்தப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் இ-ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் உண்டியலில் செலுத்தப்பட்ட வெளிநாட்டு பணங்கள் அனைத்தையும் தனித்தனியாக பிரித்து கணக்கிட்டு வைத்துள்ளது. அதில் நாணயங்களும் அடங்கும். அதை வரும் ஜூன் மாதம் 16, 17-ஆம் தேதிகளில் இ-ஏலம் மூலம் விற்பனை செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

இதில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூா், கனடா உள்ளிட்ட நாடுகளை சோ்ந்த நாணயங்கள் உள்ளன. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சந்தை பிரிவு பொது மேலாளா் அலுவலக எண் 0877-2264429 அல்லது  அல்லது ஆந்திர மாநில புரோட்டல் ஆன அல்லது  இணையதளங்களை தொடா்பு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →