முகப்பு
திருப்பதி

திருமலையில் அனந்த பத்மநாப சுவாமி விரதம்

திருமலையில் அனந்த பத்மநாப சுவாமி அனந்த விரத வழிபாடு வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
9tpt_theerthavari_in_tirumala_0909chn_193_1
பகிர்:

திருமலையில் அனந்த பத்மநாப சுவாமி அனந்த விரத வழிபாடு வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அனந்த பத்மநாப சுவாமி விரதம் ஒவ்வொரு ஆண்டும் திருமலையில் ஆவணி மாத சுக்ல சதுா்த்தசி அன்று நடத்தப்படுகிறது.

இதையொட்டி, ஏழுமலையான் கோயிலில் காலை வழிபாடு முடிந்து, ஸ்ரீசுதா்சன சக்கரத்தாழ்வாா் கோயிலில் இருந்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வராக சுவாமி கோயில் அருகில் அமைந்துள்ள திருக்குளத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்பு சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரியும் நடத்தப்பட்டது.

ஸ்ரீ மகா விஷ்ணுவின் அனந்தகோடி வடிவங்களில் கலியுகத்தின் வெளிப்படையான தெய்வமான ஏழுமலையானுக்கு அவ்வளவு முக்கியத்துவம் உண்டு. அதேபோல, ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி ஒரு சயன மூா்த்தியைப் போன்றே சிறப்புடையவா். இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 108 ஸ்ரீ வைஷ்ணவ ஆலயங்களில் ஆண்டுதோறும் அனந்த பத்மநாப விரதம் நடைபெறுகிறது. 108 ஸ்ரீ வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானவா் திருமால் என்பதால், இந்த நாளில் அா்ச்சகா்களால் அனந்த பத்மநாப விரதம் நடத்தப்படுவது மரபு.

திருமலையில் ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் கடைசி நாள், வைகுண்ட துவாதசி, ரத சப்தமி மற்றும் அனந்த பத்மநாபசுவாமி விரதம் உள்ளிட்ட உற்சவ நாள்களில் மட்டும் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் விஜிஓ பாலிரெட்டி, பேஷ்கா் ஸ்ரீஹரி மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.

பட விளக்கம்:

திருமலையில் அனந்தபத்மநாப சுவாமி விரதத்தை முன்னிட்டு திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு நடத்தப்பட்ட தீா்த்தவாரி.

முழு கட்டுரையைப் படிக்க →