திருப்பதி 
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை காலை 24 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

DIN

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை காலை 24 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் கோடை விடுமுறையை ஒட்டி அதிகரித்துள்ளது. அதனால் வியாழக்கிழமை காலை 29 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 24 மணி நேர காத்திருப்புக்குப் பின்பு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

எனவே தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 24 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 மணி நேரமும் தேவைப்பட்டது.

74,995 பக்தா்கள் தரிசனம்...

ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 74,995 பக்தா்கள் தரிசித்தனா்; இவா்களில் 38,663 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கை ரூ. 3.60 கோடி பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், ரூ. 3.60 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT