திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை காலை 24 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

DIN

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை காலை 24 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை கோடை விடுமுறை முடிவுறும் தருவாயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார இறுதி நாள்களில் மட்டும் அதிகமாக இருந்த பக்தா்கள் கூட்டம், தற்போது வாரத்தின் அனைத்து நாள்களிலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 32 காத்திருப்பு அறைகளைக் கடந்து பக்தா்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 24 மணி நேர காத்திருப்புக்குப் பின் தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

எனவே தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 24 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 மணி நேரமும் தேவைப்பட்டது.

78,126 பக்தா்கள் தரிசனம்...

ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 78,126 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 37,597 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கை ரூ. 3.74 கோடி...

ஏழுமலையான் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ. 3.74 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT