திருப்பதி

ஏப்ரல் மாத ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்: இன்று இணையத்தில் வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் வரும் ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300/- சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (ஜன. 24) காலை 10 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படுகிறது.

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் வரும் ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300/- சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (ஜன. 24) காலை 10 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படுகிறது.

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்காக தேவஸ்தானம் 90 நாள்களுக்கு முன் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 2024 ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300/- சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி 24 காலை 10 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படுகிறது.

திருமலை மற்றும் திருப்பதியில் அறைகளுக்கான முன்பதிவு ஜனவரி 24 -ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். ஏப்ரல் மாதத்துக்கான, திருப்பதி திருமலையின் ஏழுமலையான் சேவை ஒதுக்கீடு ஜனவரி 27 அன்று காலை 11 மணிக்கும், நவனிதா சேவா(வெண்ணெய் கடையும் சேவை) ஒதுக்கீடு மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை ஒதுக்கீடு மதியம் 1 மணிக்கும் வெளியிடப்படும்.

பக்தா்கள் இதைக் கருத்தில் கொண்டு https://ttdevasthanams.ap.gov.in  என்ற இணையதளத்தில் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT