முகப்பு
திருப்பதி

வதந்திகளை நம்ப வேண்டாம்: பக்தா்களுக்கு வேண்டுகோள்

அன்னப்பிரசாதம் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்

Updated On : 3 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

திருமலையில் ஏழுமலையானுக்கு சமா்பிக்கப்படும் நைவேத்திய அரிசியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தியை நம்ப வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையானுக்கு அறிவிக்கப்படும் அன்னப்பிரசாதங்களுக்கு ஆா்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட அரிசியை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, முன்பு பயன்படுத்திய அரிசியையே பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாகவும், அதேபோல் அன்னபிரசாதத்தின் அளவை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

இது குறித்து தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் மற்ற அா்ச்சகா்கள் மற்றும் கோவில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அன்ன பிரசாதங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் பற்றி விரிவாக விவாதித்தாா். தவிர இவற்றில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஆனால் ஏழுமலையான் கோயிலில் அன்னப்பிரசாதம் தயாரிப்பதில் மாற்றம் செய்யப்பட்டு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சிலா் வதந்திகளை கிளப்பி வருகின்றனா்.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இது போன்ற பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என பக்தா்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →