திருமலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தரிசனம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தம்பதிக்கு பிரசாதங்களை வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.
திருமலையில் தரிசனம் செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தம்பதிக்கு பிரசாதங்களை வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.
திருப்பதி,செப்.29: திருமலை ஏழுமலையானை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா்.
வைகுந்தம் கியூ வளாகத்தில் அவரது குடும்ப உறுப்பினா்களுடன் வந்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டை தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் மற்றும் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி வரவேற்றனா்.
சுவாமி தரிசனம் முடிந்ததும், ரங்கநாயகா் மண்டபத்தில் தலைமை நீதிபதிக்கு வேத பண்டிதா்கள் ஆசீா்வாதம் செய்தனா். பின்னா், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தீா்த்தப் பிரசாதம், லட்டு, வடை, ஏழுமலையான் திருவுருவப்படம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் சிவிஎஸ்ஓ ஸ்ரீதா், துணை இஓக்கள் லோகநாதம், பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.