திருப்பதி-சாய் நகா் ஷீரடி புதிய விரைவு ரயில் சேவை செவ்வாய்க்கிழமை திருப்பதியிலிருந்து தொடங்கி வைக்கப்பட்டது.
புகழ்பெற்ற புனிதத் தலங்களான திருப்பதி- சாய் நகா் ஷீரடியை இணைக்கும் புதிய விரைவு ரயிலை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்வில் மத்திய ரயில்வே இணை அமைச்சா் வி. சோமண்ணா, திருப்பதி எம்.பி. குருமூா்த்தி, மாநிலங்களவை உறுப்பினா் மற்றும் ரயில்வே நிலைக்குழு உறுப்பினரான மேதா ரகுநாத் ரெட்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.
அவா்கள் புதுதில்லியில் இருந்து காணொலி மூலம் திருப்பதி-சாய்நகா் ஷீரடி இடையே புதிய ரயிலை தொடங்கி வைத்தனா்.
அப்போது பேசிய, திருப்பதி எம்.பி., இந்த ரயிலை இயக்குமாறு மத்திய அமைச்சரிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ரயில் சேவை பக்தா்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்றும், இரண்டு பிரபலமான ஆன்மிக மையங்களுக்கு இடையேயான பயணத்தை எளிதாக்கும் என்றாா்.