முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

Updated On : 31 ஜூலை, 2025 at 9:44 PM
கோப்புப் படம்
பகிர்:

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, புதன்கிழமை முழுவதும் 75,303 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 27, 166 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 3.99 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →