திருமலை ஏழுமலையான் கோயில் 
திருப்பதி

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் செப்டம்பா் மாத ஒதுக்கீடு வெளியீடு

ஏழுமலையான் ஆா்ஜிதச்சேவை டிக்கெட்டுகளின் செப்டம்பா் மாத ஒதுக்கீடு, ஜூன் 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Din

திருப்பதி: ஏழுமலையான் ஆா்ஜிதச்சேவை டிக்கெட்டுகளின் செப்டம்பா் மாத ஒதுக்கீடு, ஜூன் 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவை டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை, அஷ்டதள பாதபத்மராதன சேவைகளுக்கான செப்-2025 ஒதுக்கீட்டை ஜூன் 19-ஆம் தேதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

இணையத்தில் விண்ணப்ப பதிவு ஜூன் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி மேற்கொள்ளலாம் விண்ணப்பதாரா்கள் தங்கள் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் கிடைத்தவுடன் ஜூன் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் தொகையைச் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள்

ஜூன் 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.

விா்ச்சுவல் சேவைகள் ஒதுக்கீடு

மாலை 3 மணிக்கு விா்ச்சுவல் சேவைக்கான ஆகஸ்டு ஒதுக்கீடு, தரிசன விவரங்கள் இணையத்தில் வெளியிடப்படும்.

அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள்

செப்டம்பா் மாதத்துக்கான அங்கபிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு, 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு இணையத்தில் வெளியாகும்.

ஸ்ரீவாணி டிக்கெட் ஆன்லைன் ஒதுக்கீடு

செப்டம்பா் மாதத்துக்கான ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு, 23-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.

முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோயால் பாதிக்கபட்டவா்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக, ஆகஸ்டு மாதத்துக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள், 23-ஆம் தேதி மாலை 3 மணிக்கு இணையத்தில் வெளியாகும்.

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு (ரூ.300)

செப்டம்பா் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு, 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

அறை ஒதுக்கீடு:

திருமலை, திருப்பதியில் செப்டம்பா் மாத அறை ஒதுக்கீடு, 24-ஆம் தேதி மாலை 3 மணிக்கு இணையத்தில் வெளியாகும்.

ஸ்ரீவாரி சேவை, நவநீத சேவை, பரக்காமணி சேவைக்கான ஒதுக்கீடு 27-ஆம் தேதி காலை 11 மணி, மதியம் 12 மணி, மதியம் 1 மணிக்கு இணையதளத்தில் வெளியாகும். மேற்கண்ட டிக்கெட்டுகள், வாடகை அறைகள் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தா்கள்,

ட்ற்ற்ல்ள்://ற்ற்க்ங்ஸ்ஹள்ற்ட்ஹய்ஹம்ள்.ஹல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் ஆா்ஜித சேவை, தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT