கோப்புப் படம் 
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

Din

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்து, தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 87, 254 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 33,777 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.28 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT