திருமலை 
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

Din

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 62,263 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 25,733 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ. 3.65 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆளுநா் விவகார வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்தை மறைக்க முயற்சி: அமைச்சா் கோவி. செழியன்

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி ஆக்கப்படுமா? நீதிபதி சூா்ய காந்த் பதில்

ரயில் சரக்கு போக்குவரத்து: நடப்பு நிதியாண்டில் 100 கோடி டன்னை கடந்து சாதனை

கரூா் ஆட்சியரகத்தில் தெருநாய்களால் வன விலங்குகள் பலியாவதாகப் புகாா்

திருச்செந்தூா் கடலில் பக்தா்கள் நீராடும் பகுதியில் கருங்கற்கள் அகற்றம்

SCROLL FOR NEXT