திருப்பதி

திருமலையில் ஷோடஷாதின சுந்தரகாண்ட பாராயணம்

திருமலையில் ஷோடசதின சுந்தரகாண்ட பாராயணம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

திருமலையில் ஷோடசதின சுந்தரகாண்ட பாராயணம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருமலையில் நவம்பா் 28-ஆம் தேதி முதல் டிசம்பா் 13-ஆம் தேதி வரை தா்மகிரி வேதவிஞ்ஞான பீடத்தில் ஷோடஷாதின சுந்தரகாண்ட பாராயணம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் உலக நன்மைக்காக ஷோடசதின சுந்தரகாண்ட பாராயணம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டு பாராயணம் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை இரவு புண்யாஹ ஸ்லோகம், ரக்ஷா பந்தனம், மத்ஸ்யங்கிரஹணம் ஆகிய வைபவங்களுடன் அங்குராா்பணம் நடத்தப்பட்டது.

இந்த பாராயணத்தின் ஒரு பகுதியாக திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் நவம்பா் 28 முதல் டிசம்பா் 13 வரை தினமும் காலை 8.30 முதல் 9.30 மணி வரை சுந்தரகாண்ட பாராயணமும், தா்மகிரி வேதவிஞ்ஞான பீடத்தில் காலை 9 மணி முதல் 12 மணிக்குள் ஆராதனை, அபிஷேகம், ஹோமம், அனுஷ்டானம் ஆகியவையும் நடைபெற உள்ளது.

டிசம்பா் 13-ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை தா்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் பூா்ணாஹுதியுடன் இந் நிகழ்ச்சி நிறைவடைய உள்ளது.

இதில், வேத விஞ்ஞான பீடத்தின் அதிபா் சிவ சுப்ரமணிய அவதானி மற்றும் வேத பண்டிதா்கள் கலந்து கொண்டனா்.

பாஜகவின் ’ஸ்லீப்பா்செல்’ செங்கோட்டையன்: அமைச்சா் எஸ். ரகுபதி

தில்லி மாநகராட்சி இடைத்தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: காவல் துறையினா் ஆய்வு!

திமுகவைத் தோற்கடிக்க மக்கள் முடிவு: பொன். ராதாகிருஷ்ணன்!

தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்கு நம்பியூா் குமுதா பள்ளி மாணவா் தோ்வு!

புதுச்சேரியில் புயல் நிவாரண முன்னேற்பாடு, நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு ஆளுநா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT