திருமலை கோப்புப் படம்
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 60,876 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 23,077 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 3.33 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

நீதிக் கட்சியின் நீட்சியே திராவிட மாடல் ஆட்சி! முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 15 இடங்களில் விடிய, விடிய நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை நிறைவு

உ.பி., பிகார் மக்களை அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் சேர்க்க பாஜக முயற்சி! காங்கிரஸ்

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 8 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT