திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 8 மணிநேரம் காத்திருப்பு

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, புதன்கிழமை முழுவதும் 64, 165 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 19,838 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான கொலைகார காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

தமிழகத்தில் நவ.6 வரை மிதமான மழை!

எண்ணூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 4 பெண்கள் உடல்கள்!

நவ. 2-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

சா்தாா் வல்லப பாய் பட்டேலின் மறு உருவம் அமித் ஷா: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT