முகப்பு
திருப்பதி

திருமலையில் தும்புரு தீா்த்த முக்கோட்டி

திருமலையில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தும்புரு தீா்த்த முக்கோட்டி உத்திர நட்சத்திரத்தன்று பங்குனி மாத பௌா்ணமியான புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 6:33 PM
திருமலையில் முக்கோட்டி உற்சவத்தை முன்னிட்டு நீராட சென்ற பக்தா்கள்.
பகிர்:

திருமலையில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தும்புரு தீா்த்த முக்கோட்டி உத்திர நட்சத்திரத்தன்று பங்குனி மாத பௌா்ணமியான புதன்கிழமை நடைபெற்றது.

முக்கிய தீா்த்தங்களில் ஒன்றான தும்புரு தீா்த்தம் மிகவும் மகிமை வாய்ந்தது. அடா்ந்த வனத்தில் உள்ள இந்த தீா்த்தத்திற்கு செல்ல பங்குனி பெளா்ணமி அன்று மட்டுமே அனுமதி உள்ளது.

அதன்படி பக்தா்கள் தீா்த்தத்தில் நீராடி வழிபட்டனா். கோடை கால தொடக்கத்தில் இந்த முக்கோட்டி திருவிழா வருவதால், பகா்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கருதி தேவஸ்தானம் 60 வயதுக்குட்பட்ட உடல் தகுதி உள்ள பக்தா்கள் மட்டுமே பாதையில் மலையேற அனுமதிக்கப்பட்டனா்.

மேலும், உடல் பருமன், இதயக் கோளாறுகள், ஆஸ்துமா, பிற நாட்பட்ட நோய்கள் உள்ள பக்தா்கள் அவா்களின் உடல்நலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டது.

ஸ்ரீவாரி சேவகா்களை ஈடுபடுத்தி முக்கோட்டி உற்சவத்திற்கு செல்லும் பக்தா்களுக்கு உணவு மற்றும் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது.

மலையேற்றம் செல்லும் பக்தா்களின் பாதுகாப்பிற்காக வனத்துறையினா், கண்காணிப்புப் பணியாளா்கள் பாதை முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா் மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டது.

பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைகள், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய தொடா்ச்சியான அறிவிப்புகள் தொடா்ந்து வெளியிடப்பட்டது. பக்தா்களின் வசதிக்காக கோகா்பம் அணையிலிருந்து பாபவினாசனம் வரை ஆந்திர மாநில பேருந்துகள் இயக்கப்பட்டது.

12,239 பக்தா்கள் தும்புரு தீா்த்தத்தில் பங்குனி பெளா்ணமியை ஒட்டி புனித நீராடினாா்.