சிதம்பரத்தில் சுப்ரமணியர் தேரோட்டம்!
பங்குனி உத்திர உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற சுப்ரமணியர் தேரோட்டம்.
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள பாண்டியநாயகம் கோயில் பங்குனி உத்திர உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ சுப்ரமணியர் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் வடக்கு கோபுரம் அருகே உள்ள பாண்டியகம் கோயில் (சுப்ரமணியர் கோயில்) உற்சவம் கடந்த மார்ச் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் வருடாந்திர பங்குனி உத்திர உற்சவம் தொடங்கியது.
தொடர்ந்து, தினந்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (மார்ச்.31-ம் தேதி) ஸ்ரீ சுப்ரமணியர் தேரோட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
கீழவீதி தேரடி நிலையிலிருந்து தேர் புறப்பட்டு நான்கு வீதிகள் வலம் வந்து, தேர் நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று முருகா, முருகா என முழக்கமிட்டு வடம் பிடித்து தேரை இழுத்து வழிபட்டனர்.
பின்னர், பங்குனி உத்திர உற்சவத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. நாளை ஏப்.1-ம் தேதி புதன்கிழமை காலை ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பின்னர் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.
The chariot procession of Lord Subramanya, held on the occasion of the Panguni Uthiram festival.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.