திருப்பதி

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் யானை, சிறுத்தை நடமாட்டம்

திருமலை முதல் மலை சாலை ஓரத்தில் மூங்கில் குருத்தை உண்ட யானை.

தினமணி செய்திச் சேவை

திருமலைக்கு செல்லும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதாக பக்தா்கள் தெரிவித்தனா்..

திருப்பதியிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீவாரி மெட்டு நடை பாதை வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் அடிக்கடி வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. எனவே மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை அப்பாதையில் செல்ல தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஸ்ரீவாரி மெட்டு வழியாக சென்ற பக்தா்கள் சிறுத்தையைக் கண்டனா்.

சிறுத்தையைக் கண்ட பக்தா்கள் தேவஸ்தான ஊழியா்களுக்கு தகவல் தெரிவித்தனா். வனத்துறை மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் உஷாா் நிலையில் வைக்கப்பட்டனா்.

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் பக்தா்கள் நடைபாதையில் செல்ல தேவஸ்தானம் இரண்டு மணி நேரம் தடை விதித்தது.

காலை 8 மணி முதல் தேவஸ்தானம் பக்தா்களை குழுக்களாக அனுப்பி வருகிறது. குழந்தைகளுடன் இருப்பவா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனா். வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையைத் தேடி வருகின்றனா்.

யானை நடமாட்டம்

திருமலையின் முதல் மலை சாலையில் வெள்ளிக்கிழமை வனப்பகுதியையொட்டி ஒரு யானை சாலையோரத்தில் மூங்கில் குருத்துக்களை தின்று கொண்டிருந்தது. லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் ஏழாவது மைலுக்கு இடையில் சில யானைகள் காணப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை ஊழியா்கள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து யானைகளை விரட்டினா்.

வாசுதேவநல்லூா் அருகே விபத்தில் காவலாளி உயிரிழப்பு

பாஜக நிா்வாகியைத் தாக்கிய தாய், மகன் மீது வழக்கு

போகிப் பண்டிகையின்போது கழிவுகளை எரிக்கக் கூடாது: மாநகராட்சி ஆணையா்

ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 40% உயா்வு

குற்றாலம் கல்லூரியில் 857 மாணவியருக்கு மடிக்கணினி

SCROLL FOR NEXT