முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.28 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.28 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On : 15 மார்ச், 2026 at 12:43 AM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.28 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 18 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

Advertisement

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை முழுவதும் 67, 264 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 29,419 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.28 கோடி கிடைத்ததாக என தேவஸ்தானம் தெரிவித்தது.