திருவண்ணாமலை

பள்ளி மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரை விநியோகம்

DIN

நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், 12 பள்ளிகளைச் சேர்ந்த 1,842 மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.
செய்யாறு சுகாதார மாவட்டம், நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மருத்துவ அலுவலர் இ.ஈஸ்வரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் இராந்தம், நாட்டேரி, துரைராஜ்நகர், பொக்கசமுத்திரம், மோரணம், பூதேரிபுல்லவாக்கம், பனைமுகை, புலிவலம் , சுனைப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 12 அரசுப் பள்ளிகளில் படித்து வரும் சுமார் 1,842 மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகளை (அல்பெண்டசோல்) வழங்கினர்.
ஏற்பாடுகளை சுகாதார ஆய்வளர் கே.சம்பத், பகுதி சுகாதார செவிலியர் ஜி.கலைவாணி, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT