திருவண்ணாமலை

நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு தாற்காலிகப் பணியிடங்களுக்கு தகுதியானோர் ஜூன் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

DIN

திருவண்ணாமலை மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு தாற்காலிகப் பணியிடங்களுக்கு தகுதியானோர் ஜூன் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
திருவண்ணாமலை மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்களில் சில தாற்காலிகப் பணியிடங்கள் காலியாக உள்ளன.
குறிப்பாக, 10 அலுவலக உதவியாளர் பணியிடங்கள், 5 மசால்சி (பியூன்) பணியிடங்கள், 4 அலுவலகக் காவலர் பணியிடங்கள் உள்ளிட்ட தாற்காலிகப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன்படி, உரிய கல்வித் தகுதி, வயது, பிற தகுதிகள் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்து திருவண்ணாமலை மாவட்ட நீதிபதிக்கு ஜூன் 23-ஆம் தேதிக்குள் பதிவு அஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டும்.
கல்வித் தகுதி, வயது, பிற தகுதிகள், இன சூழற்சி முறை உள்ளிட்ட விவரங்களை  இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT