திருவண்ணாமலை

மதுபானக் கடையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

DIN

செய்யாறை அடுத்த கொருக்காத்தூர் கிராமத்தில் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி, கிராம மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொருக்காத்தூர் கிராமத்தில் நூலகம், மேல்நிலைப் பள்ளி, வங்கி மற்றும் குடியிருப்பு ஆகியவற்றுக்கு அருகில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்தக் கடையில் மது அருந்துவோர் தினமும் அந்தப் பகுதியில் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனராம்.
இதன் காரணமாக பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், நூலகத்துக்கு படிக்க வரும் வாசகர்கள் மற்றும் கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கொருக்காத்தூரில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரணமல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முரளி மற்றும் போலீஸார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் மதுபானக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT