திருவண்ணாமலை

ஆரணியில் மே 22 முதல் ஜமாபந்தி

DIN

ஆரணி வட்டத்தில் மே 22 முதல் ஜமாபந்தி நடைபெற உள்ளதாக ஜமாபந்தி அலுவலர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஆரணி வட்டத்தில் மே 22 முதல் ஜமாபந்தி நடைபெறுவதை முன்னிட்டு, ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தமிழ்மணி தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், ஜமாபந்தி அலுவலர் (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்) சுப்பிரமணியன் கலந்துகொண்டு, வருகின்ற 22-ஆம் முதல் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஜமாபந்தியில் மனு அளிக்க வரும் மக்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும், பட்டா கேட்டு வரும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார்.
ஆலோசனைக் கூட்டத்தில், வட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணி, இடர்பாடு நிவாரண வட்டாட்சியர் சேகர், மண்டலத் துணை வட்டாட்சியர் வெங்கடேசன், துணை வட்டாட்சியர் நடராஜன், வருவாய் அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, தரணிகுமார், திருவேங்கடம், சரவணன், தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆரணி வட்டத்தில் மே 22, 24, 26, 30, 31 ஆகிய தேதிகளில் ஜமாபந்தி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT