முகப்பு
திருவண்ணாமலை

கலை நிகழ்ச்சி மூலம் டெங்கு விழிப்புணர்வு

போளூர் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை டெங்கு குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

போளூர் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை டெங்கு குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போளூர் பேரூராட்சி சார்பில், டெங்கு, தனிநபர் கழிப்பறை அமைத்து பயன்படுத்துதல், பொது சுகாதாரம், நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின்போது, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமாபானு, சுகாதார ஆய்வாளர் சோமு, இளநிலை உதவியாளர்கள் பிச்சாண்டி, பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.
போளூர் அல்லிநகர், பழைய பேருந்து நிலையம், சந்தைப் பகுதி, வேலூர் - திருவண்ணாமலை சாலை என பல்வேறு இடங்களில் இந்த கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →